2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

தனிமையில் வசித்துவந்த வயோதிப பெண் சடலமாக மீட்பு

Freelancer   / 2025 ஒக்டோபர் 28 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், சுன்னாகம் ஆறுமுகம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்த வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த நடராஜா சந்திரா (வயது-70) என்பவராவார்.

சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய
நேற்று திங்கள் கிழமை (27) மாலை சம்பவ இடத்துக்கு சென்ற யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .