2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

யாழில் திடீர் கோடீஸ்வரர்களுக்கு ஆபத்து

Freelancer   / 2025 ஒக்டோபர் 28 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் சட்டவிரோதமாக சொத்துக்களை சேகரித்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால நேற்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சொத்துக்களை சேகரித்தவர்களில் 11 பேருக்கு மட்டுமே வழக்கு போடப்பட்டுள்ளது.

ஆனால் இது போன்று பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

பொதுமக்களிடம் பெறுகின்ற தகவல்களின் அடிப்படையில், சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தவர்கள், போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .