2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

படகுகளை மீட்க தீவிர நடவடிக்கை

George   / 2016 ஜூலை 09 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என இந்திய மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், 'தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கம், வடக்கு மாகாணம், இரு தரப்பு மீனவ பிரதிநிதி அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இப்பிரச்சினை தொடர்பாக விரைவில் முதல்வரைச் சந்திக்க உள்ளேன்.  இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான முறையில் தீர்வு காண மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X