2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

"புத்தா பார்" சர்வதேச உணவகத்திற்கு எதிராக இலங்கை அரசு நடவடிக்கை

Super User   / 2010 ஜூன் 21 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

"புத்தா பார்" எனும் சர்வதேச உணவகம் ஒன்று சீனாவில் இயங்கிவருவதாகவும் அதன் தலைமையகம் பிரான்ஸ் நாட்டில் உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு டெய்லிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தது.

"புத்தா பார்" எனும் பெயரில் மதுபான விற்பனை நிலையங்கள் பிரான்ஸில் இயங்கி வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.

குறித்த மதுபான சாலைகளில் புத்த பகவானின் சிலைகள் காணப்படுவதாகவும், அந்த சிலைகளுக்கு முன்னால் மதுபானம் அருந்தப்படுவதுடன், நடன நிகழ்வுகளும் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது உண்மையாக இருப்பின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.


  Comments - 0

 • Ossan Salam - Qatar Tuesday, 22 June 2010 03:28 PM

  போதி மரத்தின் கீழ் அமர்ந்துகொண்டு கள்ளு அருந்தினான் என்பதற்காக அவன் சாமியாராகிவிட முடியாது! புத்த பிரானின் பெயரை இத்தகைய உணவகத்திற்கு (அல்ல மதுபான சாலைக்கு) ஏன் வைத்தார்கள் என்பது புரியாத புதிராகும்! சில வேளை நடுத்தர அளவில் (சுரா மேரே மத்ய பமா) மது அருந்தலாம் என புத்தர் போதித்ததனாலா ! அதற்காக அவரை வழிபாடு செய்துவிட்டு மது அருந்தும் புது நடைமுறையை அறிமுகப்படுதுகிறார்களா? ஒன்றுமே புரியவில்லை..... இருந்தாலும் ஒரு ரகசியம்! உலகில் அதிகளவு மது அருந்துபவர்களைக் கொண்ட நாடு........பிரான்ஸ் தான் !!!

  Reply : 0       0

  Ossan Salam - Qatar Tuesday, 22 June 2010 03:33 PM

  இது "புத்தா பார்" எனும் ஆங்கிலப் பெயரா அல்லது " புத்தா (இதோ இந்த மக்கள் பண்ணும் அநியாயத்தை) பார்" எனும் தமிழ் கூற்றா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--