2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

பிறந்து 25 நாளேயான சிசு உயிரிழப்பு

Freelancer   / 2025 ஒக்டோபர் 22 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூளையில் கிருமித் தொற்று ஏற்பட்டு பிறந்து 25 நாளேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிசு கந்தர்மடம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆதித்தன் கிருசாலினி என்ற 25 நாள் சிசு வாகும்.

கடந்த மாதம் 27 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் சிசு பிறந்த நிலையில் காய்ச்சல் ஏற்பட்டதால் யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த முதலாம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்க் கிழமை சிசு உயிரிழந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .