Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 23 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன என, பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஸித தெரிவித்துள்ளார்.
இரத்மலானை, தங்காலை, மாத்தறை, சிலாபம், கொழும்பு மெகசின் சிறைச்சாலை, மகரகம அபேக்ஷ வைத்தியசாலை, வட்டரெக சனித்தா வித்தியாலயம், நேபாளம் காத்மண்டு நகரத்திலுள்ள இலங்கை தூதரக அலுவலகம் ஆகிய இடங்களிலேயே இந்த விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதேவேளை, இம்முறை பரீட்சைக்கு 433,050 பாடசாலை பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
283,958 தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
7 hours ago