2021 மார்ச் 03, புதன்கிழமை

போராட்டத்தை இடைநிறுத்தினர் வேலையற்ற பட்டதாரிகள்

Editorial   / 2017 ஜூலை 19 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

143 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள், தமது போராட்டத்தை, இன்று (19) முதல் இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள், தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் எனக் கோரி, யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால், இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையிலேயே, தமது போராட்டத்தை இடைநிறுத்துவதாக, வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் கடந்த புதன்கிழமை (12) இடம்பெற்ற மாநாட்டில், ஓராடு பயிற்சிக் காலத்துக்கு உட்பட்டவாறு, மாவட்ட அடிப்படையில், பட்டதாரிகள் அரச பணியில் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதுடன், வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர் நியமனங்கள் குறித்ததும் அமைச்சரவையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே, மேற்படி விடயத்தை தாம் வரவேற்பதுடன், உரிய முறையில் தமக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும். இது தொடர்பான விசேட வர்த்தமானியை வெளியிட வேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .