2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

பிரதமர் தி.மு.ஜயரட்னவுக்கு இன்று 79ஆவது வயது பூர்த்தி

Super User   / 2010 ஜூன் 04 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் டி.எம்.ஜயரட்ன இன்று தமது 79ஆவது பிறந்ததினத்தை கொண்டாடுகிறார்.

இவர் 1931ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4ஆம் திகதி கம்பளை மிதப்பிட்டியவில் பிறந்தவர் ஆவார்.

1950ஆம் ஆண்டில் அரசியலில் கால்பதித்த டி.எம்.ஜயரட்ன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 13ஆவது உறுப்பினராக பதிவுசெய்யப்பட்டவர் ஆவார்.

ஐக்கிய முன்னணி சார்பில் கம்பளைத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய இவர், 1970ஆம் ஆண்டிலேயே முதலாவதாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X