2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

பொரலஸ்கமுவவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 5 வயது சிறுமி காயம்

Super User   / 2010 ஏப்ரல் 23 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, பொரலஸ்கமுவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் ஐந்து வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.

வீதியோரத்தில் இருந்த பிளாஸ்ரிக் போத்தலொன்றை குறித்த சிறுமி எடுக்க முற்பட்டபோதே, இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ள சிறுமி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ரனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .