2021 மே 12, புதன்கிழமை

பாதுகாப்புடன் திருவிழா இடம்பெறும்: பொலிஸ்

George   / 2015 ஒக்டோபர் 02 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு 13, மகா வித்தியாலய மாவத்தையில் (பாபர் வீதி) உள்ள ஸ்ரீ முனியாண்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் வருடாந்த திருவிழாவின் தேர் வலம், பொலிஸ் பாதுகாப்புடன் இம்மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர, வெள்ளிக்கிழமை(02) தெரிவித்தார்.

கொழும்பு 13 ஹாவித்தியாலய மாவத்தையில் உள்ள இந்து கோவிலின் வருடாந்த திருவிழாவின் போது, சுவாமி வீதிவலம் வருவதற்கு, மாற்று இனத்தைச்சேர்ந்தவர்கள் இடம்தர மறுப்பதாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தமை தொடர்பில் அவரிடம் கேட்டபோது அவர் இதனை கூறினார்.

குறித்த முறைப்பாட்டை ஆலய நிர்வாக சபையைச் சேர்ந்த ஒருவர் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முறைப்பாட்டையடுத்து, அப்பிரதேசத்திலுள்ள மக்களை அழைத்து, கொழும்பு வடக்கு பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், இன்று வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது, இரு தரப்புக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்;பட்டுள்ளதுடன் எதிர்வரும் 9ஆம் திகதி குறித்த சுவாமி வெளிவீதி ஊர்வலம் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் ஊடகப்பேச்சாளர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .