Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 நவம்பர் 24 , பி.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரத்தின் போது, வடக்கில், எவரையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியினை ஏற்ற, எவரையும் அனுமதிக்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தனது அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை நினைவு கூரவோ, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியினை ஏற்றவோ வடக்கு, கிழக்கிலுள்ள மக்களை அனுமதித்திருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியினை சில குழுக்கள் ஏற்றப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
தெற்கிலுள்ள சில மக்கள், இந்த வாரத்தின் முக்கியத்துவத்தை மறந்து விட்டதாகவும், முன்னைய காலத்தில் தெற்கைத் தாக்குவதன் மூலம், பிரபாகரன் மாவீரர்களை நினைவு கூறுவதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியினை மக்களை ஏற்ற அனுமதித்தால், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்பாக நாங்கள் மண்டியிடுவதற்கு சமன் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, சில முன்னாள் விடுதலைப் புலிகளின் முன்னணி குழுக்களின் மீது விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்ட நிலையிலேயே மாவீரர் வாரம் நினைவு கூரப்படுவதாக அவர் தெரிவித்தார்.
8 hours ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
18 Sep 2025