2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

புலி தலைதூக்காது: சஜித்

Kogilavani   / 2015 நவம்பர் 19 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது குடும்பமும் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாசமாக்கப்பட்ட குடும்பமே என்று தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ, புலிகள் மீண்டும் தலை தூக்குவதற்கு ஒருபோதும் இடமளியேன் என்றும் தெரிவித்தார்.

திஸ்ஸமாஹாராமவில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“பிரேமதாஸ குடும்பமே புலிப் பயங்கரவாதிகளினால் பாதிக்கப்பட்ட குடும்பமாகும். எக்காரணத்தையும் வைத்துக்கொண்டு, புலிகள் தலைதூக்குவதற்கு இடமளிப்போருக்கு, எங்களுடைய ஆசிர்வாதம் கிடைக்காது.  

சந்தேக நபர்கள் என்றடிப்படையில் மட்டும், பல வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை எவ்வளவு தூரத்துக்கு நெறிமுறைசார்பானது என்பதனை பார்க்கவேண்டும்.

புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வதை சிலர், கால்பந்தாட்டம் ஆடுகின்றனர். புலிப் பயங்கரவாதம் நிறைவடைந்துவிட்டது. அதனை தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமளியேன்' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X