Editorial / 2020 ஜனவரி 15 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸர்பைஜானில் மாடி வீடொன்றில் பரவிய தீயில் சிக்கி உயிரிழந்த 3 மாணவிகளின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இன்று (15) முற்பகல் 9..15 மணியளவில் மாணவிகளின் சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த சடலங்களை கொண்டு வருவதற்கான செலவினை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அஸர்பைஜான் மேற்கிலுள்ள கெஸ்பியன் பல்கழைக்கழகத்தில் (Caspian University) கல்வி பயின்ற 21, 23 மற்றும் 25 வயதான 3 மாணவிகள் அண்மையில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
குறித்த பல்கலைக்கழகத்தில் பாடநெறியொன்றை கற்பதற்காக 3 மாணவிகளும் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் அங்கு சென்றிருந்தனர்.
மாணவிகள் தங்கிருந்த இரண்டு மாடிக் கட்டடத்தில் பரவிய தீயினால் வெளியேறிய விஷ வாயுவை சுவாசித்தமையால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுவளை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளே இந்தத் தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
30 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
4 hours ago