Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜனவரி 14 , பி.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மார்ச் மாதம் 01ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த சம்பளம் ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இதனுடன் இணைந்ததாக உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தோட்டத் துறையின் அனைத்து பகுதிகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
தேயிலை தொழிற்துறையின் தரத்தையும் வினைத்திறனையும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள வரி விலக்கு, உர மானியம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் அதில் உள்ளடங்கும். இந்த நிவாரணங்கள் பெருந்தோட்ட கம்பனிகளுக்கே கிடைப்பதால் அதன் நன்மைகளை தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
உற்பத்தி மற்றும் கைத்தொழிற் துறை அடையும் முன்னேற்றத்துடன் இணைந்ததாக அதன் நன்மைகள் தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago
7 hours ago
8 hours ago