2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,083பேர் வியாழனன்று மீள்குடியேற்றம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 06 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைபற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு, தெற்கு மற்றும் செம்மலை ஆகிய இடங்களில் மீள்குடியேற்றப்படுவதற்காக இடம்பெயர்ந்த மக்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

இதற்காக, தமது பெயர்களைப் பதிவு செய்த 371 குடும்பங்களைச் சேர்ந்த 1,083பேர் அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் நாளை மறுதினம் 8ஆம் திகதி வியாழக்கிழமை காலை தத்தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான ஆயத்தங்களுடன் அன்றைய தினம் காலை 8 மணிக்கு வவுனிய நகரசபை மைதானத்துக்கு சமூகமளிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட பிரதி திட்டப் பணிப்பாளர் எஸ்.சிறிரங்கன் தெரிவித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X