2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

உலக சாதனையாளர் பரீத் நஸீரின் ஜனாஸா புத்தளத்தில் இன்று நல்லடக்கம்

Super User   / 2010 மே 25 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்ட எட்டு உலக சாதனைகளுக்கு சொந்தக்காரரான பரீத் நஸீர் தனது 56ஆவது வயதில் புத்தளத்தில் நேற்று காலமானார்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு சைக்கிளை பின்புறமாக செலுத்தியமை, 500 விஷப்பாம்புகளுடன் இருந்தமை, 72 மணித்தியாலங்கள் தொடர்ந்து பந்தைத் தட்டி சாதனை படைத்தமை, 3 நாள்கள் தொடர்ச்சியாக நடனம் ஆடியமை, 72 மணிநேரமாக கைகோர்த்து நடனம் ஆடியமை ஆகியன இவர் புரிந்த  சாதனைகளாகும்.

தில்லையடியை வசிப்பிடமாகக் கொண்ட பரீத் நஸீரின்  ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை புத்தளத்தில் இடம்பெற்றது.

இதேவேளை, பரீத் நஸீரின் மகனான உலக சாதனையாளர் பர்ஷான் நஸீர் கடந்த வருடம் ஜூன் மாதம் உலக சாதனையில் ஈடுபட்டிருந்த வேளையில், பாம்பு தீண்டி மரமானமை குறிப்பிடத்தக்கது.(R.A)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--