Editorial / 2020 மார்ச் 06 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (06) நள்ளிரவு முதல், ரயில் எஞ்சின் சாரதிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு மேற்கொள்ளப்பட்டிருந்த தீர்மானத்தை இடைநிறுத்தியுள்ளனர்.
போதைப்பொருள் போக்குவரத்துடனும் கடத்தலுடனும், ரயில் சாரதிகள் நேரடியாகத் தொடர்புபடுவதாக, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்த கருத்தை அடுத்து, அந்தக் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ரயில் எஞ்சின் சாரதிகள், இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்திருந்தனர்.
இந்நிலையில், விஜேராமையில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மேற்கொண்ட விசேட கலந்துரையாடலின் பின்பு, அந்தத் தீர்மானத்தை இடைநிறுத்தி, வழமை போன்று ரயில்களைச் செலுத்துவதற்கு, எஞ்சின் சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்போது, அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்ட கருத்தை வாபஸ் பெறுவதற்கும் ரயில் சேவையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக மேலும் கலந்துரையாடுவதற்கும், அடுத்த வாரத்தில் சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாக, பிரதமர் உறுதியளித்துள்ளார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026