Kamal / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவத்தினர் ஏற்பாடு செய்யவுள்ள அங்கவீனமான இராணுவ வீரர்களுக்கான விளையாட்டு விழாவின், 3 ஆம் நாள் நிகழ்வுகள் பாதுகாப்பு பணியாளர்களின் தளபதி ரவீந்திர சீ விஜேகுணவர்தன தலைமையில் இடம்பெறவுள்ளன.
11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு அவரிடத்தில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள நிலையிலே இந்த விளையாட்டு நிகழ்வுகளுக்கு தலைமைத் தாக்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளுக்கு பொறுப்பான அதிகாரி ஜெனரால் டபிள்யூ.டி.பி. பெர்ணான்டோ தமிழ்மிரருக்கு தெரிவிக்கையில்,
குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணைகளால் அவர் மேற்படி போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுக்கு தலைமை தாக்குவதில் நெருக்கடிகள் ஏற்படாது. குற்றப்புலனாய்வு பிரிவின் விரசாணைகளால் இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு எந்தவித தடையும் ஏற்படாது என்றார்.
மேற்படி விளையாட்டு போட்டிகள் எதிர்வரும் 19,20,21 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இதன் முதல் நாள் நிகழ்வுகள் தியகம விளையாட்டு மைதானத்தில் இராணுவ தளபதி லுதினன் ஜெனரால் மகேஷ் சேனநாயக்க தலைமையிலும், 3 ஆம் நாள் நிகழ்வுகள் பாதுகாப்பு பணியாளர்களின் தளபதி ரவீந்திர சீ விஜேகுணவர்தன தலைமையிலும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
49 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago