2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

ரூ.15 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் ஒருவர் கைது

Gavitha   / 2015 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு 13, ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ கதிரேசன் வீதியில் வைத்து 10 கிலோ 500 கிராம் கஞ்சா வைத்திருந்த நபரொருவரை, புதன்கிழமை (26) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபரை கைது செய்ததாகவும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 15 இலட்சம் ரூபாய் எனவும் பொலிஸார் கூறினர்.

32 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் இவரை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும்  ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .