2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

வடக்கில் 90வீதமான வீடுகள் சேதம்;மக்கள் தங்குமிடமின்றி அவலம்-இரா.சம்பந்தன்

Super User   / 2010 ஜூன் 09 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் மக்கள் மீள்க்குடியேற்றப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள வீடுகளில் 90 வீதமானவை முழுமையானளவில் சேதமடைந்துள்ளன. அதனால் அங்குள்ள மக்கள் தங்குமிட வசதிகளின்றி பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்  தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இதேவேளை, அப்பிரதேசங்களில் தற்போது வரட்சியான காலநிலை நிலவுவதால் தொடர்ந்து சில காலங்களுக்கு அம்மக்கள் உணவுத் தட்டுப்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். இதனால் உலக உணவுத் திட்டத்தினால் தற்போது விநியோகிக்கப்பட்டு வரும் உலர் உணவுப் பொருட்களை சில மாதங்கள் வரை நீடிக்க பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் சற்று நேரத்துக்கு முன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மீள்குடியேற்றப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள மக்களுக்காக அரசாங்கத்தால் நிர்மானித்துக் கொடுக்கப்பட்டுள்ள தற்காலிக வீடுகள் அம்மக்களுக்கு போதுமானதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அங்குள்ள மக்களுக்கான குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்  மேலும் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--