Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 மே 30 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார், பொன் ஆனந்தம், ஒலுமுதீன் கியாஸ்
எட்டு வயதுடைய சிறுமிகள் மூவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, சுமார் 10 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்வரை பாடசாலைகளுக்குச் செல்ல மாட்டோம் எனக் கூறி மாணவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதனால், மூதூரிலுள்ள சுமார் 10 பாடசாலைகள் இன்று இயங்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தராமையால், பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கையை முன்னெடுக்க முடியவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த வன்புணர்வுச் சம்பவத்தைக் கண்டித்து ஆலங்கேணி மகா வித்தியாலய மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியவெளிக் கிராமத்திலுள்ள பாடசாலையொன்றில் கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளிகள் சிலர், பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற இந்தச் சிறுமிகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மூதூர் நகரில் திங்கட்கிழமை (29) கைதுசெய்யப்பட்ட 4 பேருக்கு நாளைவரை மூதூர் நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2021
14 Apr 2021
14 Apr 2021
14 Apr 2021