2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

வரவு செலவு திட்ட வாசிப்புக்கு எதிராக நாடாளுமன்றில் ஐ.தே.க. ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 ஜூன் 29 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பின் போது, ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐ.தே.க. உறுப்பினர்களுக்கு எதிராக ஆளும்கட்சி உறுப்பினர்களில் சிலரும் கூச்சலிட்டதால் நாடாளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

இதனால் வரவு செலவுத்திட்ட வாசிப்பில் ஈடுபட்ட பிரதி நிதி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, பதற்றத்துக்கு உள்ளான நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் "குரங்குகளைப் போல் நடந்துகொள்வதாக" கூறினார்.

இருப்பினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பினை நளைய தினத்துக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.  
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--