2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

வலது தொடையை துளைத்த கம்பு அகற்றப்பட்டது

Editorial   / 2017 ஜூன் 15 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவரின் வலது தொடையை துளைத்துகொண்டு மறுபக்கத்துக்கு வந்திருந்த சுமார் ஐந்தடி நீளமான கம்பு உலை, இரண்டறை மணிநேர சத்திரசிகிச்சைக்கு பின்னர் அகற்றப்பட்டது. 

இந்த சத்திரசிகிச்சை, காலி கராப்பிட்டிய வைத்தியசாலையிலேயே நேற்று (14) மேற்கொள்ளப்பட்டது.  

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தென்னை மரத்திலேறிய நான்கு பிள்ளைகளின் தந்தை, மரத்திலிருந்து கீழே தவறிவிழுந்தபோது, தரையில், செங்குத்தாக இருந்த கம்பொன்று அவருடை வலதுகால் தொடையை துளைத்துகொண்டு, மறுபக்கத்துக்கு வந்துவிட்டது.  

தேங்காய்களை பறித்துகீழே போட்டுவிட்டு, மரத்திலிருந்து கீழே இறங்கிய போதே, இவ்வனர்த்தத்துக்கு அவர் முகங்கொடுத்துள்ளார். சுமார் 35 அல்லது 40 அடி உயரத்திலிருந்தே அவர் கீழே விழுந்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.  

அங்குனுகொலபெலேஸை சேர்ந்த அந்த நபரை, பிரதேசவாசிகள் காப்பாற்றி, கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.  

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் தருணங்களில், அவற்றை கழற்றாமல், நோயாளியை அப்படியே, வைத்தியசாலைக்கு கொண்டுவரவேண்டும், அவற்றை கழற்றினால், இரத்தம் கூடுதலாக வெளியேறும். அதனால், உயிராபத்தும் ஏற்படும் என்று சத்திரிசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் தெரிவித்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X