Kogilavani / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.கோகிலவாணி)
அடுத்த வருடம் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிக்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இச்சம்பளத்தை 10000 ரூபாவாக அதிகரிக்கும் படி நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை எதிர் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது...
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துக்கொடுப்பதாக அரசாங்கம் கூறிவருகிறது. ஆனால் 03 வருடங்கள் ஆகியும் இன்னும் அவர்களது சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. இந் நிலையில் அடுத்தவருடம் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 2500 ரூபாவாக அதிகரிக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தச் சம்பளம் 10000 ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டும்.
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவை கொண்டு நடத்த இந்த 2500 ரூபாய் சம்பளம் போதுமானதாக இல்லை. அரசாங்கம் நாளுக்கு நாள் பாண் விலை, பருப்பு விலைகளை அதிகரித்துக்கொண்டு வருகிறது.
முன்பு பிள்ளைகளுக்காக வாழ்ந்த பெற்றோர்கள் இன்று நாட்டின் நிலைமையை உணர்ந்து பிள்ளைகள் பிறந்தவுடன் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகின்றனர் அல்லது தெருவில் விட்டுகின்றனர், அல்லது பிறந்தவுடனே அந்தப் பிள்ளையை கொன்றுவிடுகின்றார்கள். அதைவிட அண்மையில் ஒரு குடும்பம் வறுமை நிலை காரணமாக பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தாங்களும் தற்கொலை செய்துகொண்டார்கள். இந்த நிலைமை எந்தக் காலத்தில் நமது நாட்டில் நிலவியது?
உள்நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் கூறிக்கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு மாதம் 12 மில்லியன் ரூபாவினை செலவிடும் அரசாங்கம் அதை நிறுத்தி அந்த தொகையிலிருந்து 10000 சம்பளத்தை வழங்கினால் வாழ்க்கைச் செலவிற்கு அது போதுமானதாக அமையும். அதேவேளை உள்ளூர் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
49 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
57 minute ago
2 hours ago