2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

14 வயதில் தாயானமை குறித்து விசாரணை

Super User   / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு காசல் வைத்தியசாலையில் 14 வயது சிறுமியொருத்தி குழந்தை பெற்றமை குறித்து ஆராய்ந்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இத்தாயும் குழந்தையும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

14 வயது சிறுமி குழந்தைக்குத் தாயானமை குறித்து வைத்தியசாலை அதிகாரிகளால் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டது.

இச்சிறுமி 13 வயதில் அவரின் வீட்டிற்கு வந்த மேஸன் ஒருவனால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அச்சம்பவத்தின்பின் தனியார் மருத்துவ மனையொன்றில் சிகிச்சைகளைப் பெறுவதற்கு நன்கொடையாளர் ஒருவர் உதவியதாகவும் அச்சிறுமி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் தெரிவித்துள்ளாள்.

தனது தந்தை இறந்துவிட்டதாகவும் தாயார் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் அச்சிறுமி தெரிவித்துள்ளாள்.


  Comments - 0

 • xlntgson Thursday, 30 September 2010 09:29 PM

  இப்பெண் பிள்ளை மனநோயாளி என்று ஆங்கில செய்தியில் விளங்கியது. எப்படி இருந்தாலும் மன நலமோ அல்லது ஏதேனும் அங்கஹீனமோ இருந்தால் பூப்பெய்தி இருந்தால் போதும் திருமணம் முடித்து கொடுக்கலாம் என்று இருந்தால் நன்மை. அவ்வாறான நிலையில் அவர்களது பெற்றோர் வீட்டில் வைத்திருக்கவும் பயமாக விடுதிகளில் சேர்க்க போதுமான பண வசதியில்லாமல் கஷ்டப்பட நேரிடாது. ஆனால் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சட்டம் மேலும் கடுமையாக்கப்படும் என்றும் அடையாளஅட்டை இல்லாவிட்டால் திருமணம் பதிவுசெய்ய படமாட்டாது என்றும் அறிவித்து உள்ளார் முரணாக.

  Reply : 0       0

  xlntgson Saturday, 02 October 2010 08:58 PM

  இப்பெண்ணை இன்னும் குழந்தை- (ஆளான குழந்தையோ!) என்று அழைப்பது வினோதம் 2 பேர் சம்பந்தமாம்! அடையாள அட்டையை கட்டாயமாக்குவதன் மூலம் இம்மாதிரியான சம்பவங்களை தடுத்துவிடமுடியும்? மாறாக சில விதிவிலக்குகளை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் இதில் முடிவெடுக்க அதிகாரம் உடையவர்கள். நல்ல பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு கெடுதலை நினைக்க மாட்டார்கள் விருப்பப்பட்டு தவறாக நடக்க தூண்டும் சட்டத்தை விட பெற்றோரின் பரம்பரை பழக்கவழக்கங்கள் மோசமானவை அல்ல இது கண்டியரின் திருமண சட்ட பரிந்துரைக்கு எதிர், பெற்றோரை அனாதைகளாக்குகிறது!

  Reply : 0       0

  xlntgson Sunday, 03 October 2010 09:33 PM

  இன்னும் ஒருவர்கூட சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று சண்டேடைம்ஸ் கூறுகிறது ஆக 3 ஆண்கள் உறவு கொள்ள, தாய் மனநிலை சரி இல்லாதவராம். இப்போது இப்பெண்பிள்ளையின் சகோதரிகளையும் அரசின் பாதுகாப்பு விடுதியில் வைத்திருக்கின்றனராம். இதெல்லாம் அரசு தலையிடவேண்டிய விடயமா? அரசு தலையிட வேண்டும் என்றால் நாம் உணவிலும் சுகாதாரத்திலும் கல்வியிலும் தன்னிறைவு கண்டு விட்டோமா, வேலைஇல்லா திண்டாட்டம் முடிவு காணப்பட்டுவிட்டதா, பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் பட்ஜெட் கொண்ட நாட்டில் சமூகநல விடயங்களுக்கு பெரும்தொகை ஒதுக்கப்படும்?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--