2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

மஹரகம நகர சபைக்கு மார்ச் 17 ஆம் திகதி தேர்தல்

Super User   / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுசித ஆர். பெர்ணான்டோ)

மஹரகம நகர சபைக்கு மார்ச் 17 ஆம் திகதி தேர்தல் நடத்துவதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மஹரகம நகரசபைத் தேர்ததலுக்கான  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுவை நிராகரிக்க கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் ஐக்கிய தேசிய கட்சி  தாக்கல் செய்த மனுவையடுத்து அந்நகர சபைக்கான தேர்தலை ஒத்தவைப்பதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்திருந்தது.

எனினும் அச்சபைக்கான தேர்தலை ஒத்திவைக்காமல் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் தீர்மானித்தால் இம்மனுவை ஐ.தே.க. வாபஸ் பெறுவதற் தயார் என இன்று நீதிமன்றில் ஐ.தே.க. பொதுச் செயலாளர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அறிவித்தார்.

அதையடுத்து ஒத்திவைப்பின்றி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் தயார் என தேர்தல்கள் ஆணையாளர்  சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார். அதன்பின் தமது மனுவை ஐ.தே.க. வாபஸ் பெற்றது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--