Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2011 ஜூன் 16 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யொஹான் பெரேரா)
ஐ.நா. செயலாளர் நாயகம் பதவிக்கு இரண்டாவது தடவையாகவும் பான் கீ மூன் தெரிவாகுவதற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு தெரிவித்தது ஏன் என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
அரசாங்கம் இவ்விடயத்தில் இரட்டை வேடம் பூணுவதாக ஐ.தே.க. தேசிய அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கூறியுள்ளார்.
இலங்கையின் இறையாண்மையை பான் கீ மீறுவதாகவும் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட அவர் முயற்சிப்பதாகவும் அரசாங்கம் குற்றம் சும்தியது. சில அமைச்சர்கள் பான் கீ மூனுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினர் என்பதையும் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்.
ஐ.நா.வுக்கு பதிலாக மாற்று அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர்கள் தெரிவித்த போதிலும் ஐ.நா. செயலாளர் நாயகம் பதவிக்கு மாற்று வேட்பாளர் ஒருவரை முன்வைக்க அரசாங்கம் தவறிவிட்டது எனவும் ரவி கருணாநாயக்க கூறினார்.
xlntgson Thursday, 16 June 2011 09:17 PM
இலங்கையின் ஆதரவில்லாவிட்டால் பென் கி மூனுக்கு மீண்டும் அந்த நாற்காலியைப் பிடிக்க இயலாதா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
58 minute ago
1 hours ago
3 hours ago