2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

தங்க பிஸ்கெட் கடத்திய இலங்கையர்கள் சென்னையில் கைது

A.P.Mathan   / 2010 ஜூலை 11 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பிலிருந்து இன்று காலை சென்னைக்குச் சென்ற விமானத்தில் தங்க பிஸ்கெட் கடத்திய இரண்டு இலங்கையர்களை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட இவ்விரு இளைஞர்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்தபோது, மலவாசலினுள் மறைத்து வைக்கப்பட்ட 1.5 கிலோகிராம் தங்க பிஸ்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

கடத்தல்காரர்களின் குழுவின் சூத்திரதாரிகளை கைது செய்யும்வரை சம்பந்தப்பட்டவர்களின் விபரங்களை வெளியிடப்போவதில்லை என சென்னை விமானநிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--