Super User / 2010 ஜூலை 12 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை நீடிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் பேர்னார்ட் சவேஜ் இது தொடர்பாக டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு தகவல் தருகையில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸுடன் நடத்தப்பட்ட இப்பேச்சுவார்த்தையில் புதிய திருப்பங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறியுள்ளார்.
இவ்விடயத்தில் புதிய யோசனைகள் எதையும் முன்வைப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்கிறதா எனக் கேட்டபோது, தற்போது அவ்வாறான திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என சவேஜ் பதிலளித்துள்ளார்.
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago