2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

வவுனியா வாடிவீட்டு வளவிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 13 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா வாடிவீட்டு வளவுக்குள் இருந்து இன்று காலை ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் தாண்டிக்குளத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ரகுநாதன் ரகுதீபன் என அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சடலத்திற்கு அருகாமையில் கிருமிநாசினிக் குப்பியும் பியர் போத்தலும் கண்டுபிடிக்கப்பட்டது. வவுனியா மாவட்ட நீதிவான் எம்.கணேசராசா ஸ்தலத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தி மரணத்திற்கான காரணத்தை அறிய சடலத்தை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு  பொலிஸாரை கேட்டுள்ளார்.

சடலம் வவுனியா பொதுவைத்தியசாலையில் பிரேத அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--