2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

தலைமன்னார் கடற்கரையில் சேதமடைந்த ஆண் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 13 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடுக்குடா கடற்கரைப் பகுதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை மாலை ஆண் ஒருவரின் சடலத்தை தலைமன்னார் பொலிஸார் மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இடுப்புக்கு கீழ்பட்ட பகுதியே மேற்படி மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்படி சடலத்தை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி ஜீவராணி வைத்தியசாலைக்கு சென்று  பார்வையிட்டதோடு, மேலதிக பரிசோதனைக்காக சடலத்தை அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்புமாறும் உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--