2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

காரைதீவில் தமிழ்ச் செம்மொழி மாநாடு

Menaka Mookandi   / 2010 ஜூலை 18 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நாளை திங்கட்கிழமை காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் தமிழ்ச் செம்மொழி விழா ஒன்றினை நடத்தவுள்ளது. நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இந்த விழாவானது முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் நினைவாக விபுலானந்தர் அரங்கில் நடைபெறுகின்றது.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தலைமையில் இடம்பெறும் தமிழ் செம்மொழி விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்கா, கௌரவ அதிதியாகக் கலந்துகொள்கிறார். விசேட விருந்தினர்களாக பாண்டிச்சேரி, புதுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏ.அறிவுத்தம்பி, சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் இ.வெங்கடேஷன், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கே.பிரேம்குமார், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.எம்.இஸ்மாயில் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த தமிழ்ச் செம்மொழி விழாவில் கலாசார ஊர்வலம், நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், முஸ்லிம் நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் மற்றும் பரிசளிப்புக்கள் போன்ற நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--