2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வாழைச்சேனை ஆலய உற்சவத்தில் தங்க நகை திருட முற்பட்ட பெண்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(வாழைச்சேனை ராக்கி)

வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய இறுதி நாளான புதன்கிழமை இரவு தங்கச் சங்கிலியை திருட முற்பட்ட பெண் பக்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

இப்பிரதேசத்தில் மிகவும் பிரசித்தமான ஆலயத்திற்கு பல பாகங்களிலும் இருந்து மக்கள் வருவது வழமையாகும்.

புதன்கிழமை இரவு இறுதி நாள் என்பதால் அதிக சனக்கூட்டமாக இருந்ததுடன், வேறு இடங்களிலிருந்து மக்கள் வருகை தந்த வண்ணமாக இருந்தனர். அத்தருணத்தில் இரவு 8.55 மணியளவில் பெண்ணொருவர் தங்கச் சங்கிலியை திருட முற்பட்டவேளை சுமார் 50 வயதான பெண்ணொருவர் அங்கிருந்த பக்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

அப்பெண் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் வாழைச்சேனை பொலிஸாரால் அவ்விடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--