Super User / 2010 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் உள்ள ரஷ்ய மருத்துவக் கல்லூரியின் பட்டத்திற்கான அங்கிகாரம் குறித்து இலங்கை மருத்துவ சபை கேள்வி எழுப்பியுள்ளது.
குறித்த கல்லூரிக்கு விரிவுரையாளர் ஒருவர் தேவையென பத்திரிகையில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்ட பின்னரே இலங்கை மருத்துவ சபை இந்த கேள்வியை கேட்டுள்ளது.
இலங்கையில் உள்ள இந்த நிறுவனத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ பட்டப்படிப்பு நெறியை அங்கிகரிப்பதற்கு மருத்துவ கட்டளைச் சட்டத்தில் அதிகாரமில்லை என இலங்கை மருத்துவ சபை வெளியிட்டுள்ள பகிரங்க அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ரஷ்யா மருத்துவ கல்லூரியின் இணை நிறுவனமான இலங்கையில் உள்ள கல்வி நிறுவனமொன்றுக்கு ஆசிரியர் தேவை எனக் கோரப்பட்டிருந்த நிலையிலே இவ்வறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
58 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago