Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
மீள் குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கைகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் சேர்த்துக் கொள்ள இலங்கை அரசை தூண்டுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவை தமிழ் கட்சிகளின் அரங்கம் கோரியுள்ளது.
பத்து கட்சிகளைக் கொண்ட தமிழ்க் கட்சிகளின் அரங்கம், நிருபமா ராவுடன் 12 அம்ச கோரிக்கைகளை குறித்து ஒரு மணிநேரம் கலந்துரையாடியது.
தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் மேற்படி கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் காண்பதில் ஒரு படியாக, 13ஆவது திருத்தத்தை அர்த்தமுள்ள விதத்தில் அமுலாக்குவதன் அவசியத்தை தமிழ்க் கட்சிகளின் அரங்கம் வலியுறுத்தியதாகக் கூறினார்.
இந்த அரங்கம், வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கு சேவை செய்வதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு அரசு சார்பாற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்பதையும் நிருபமா ராவின் கவனத்துக்கு கொண்டு வந்ததாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
"பொது மக்கள் வாழும் பகுதியில் இராணுவ குடியிருப்பு முகாம்களை அமைக்கக் கூடாது என்பதையும் அவர்கள் வலியுறுத்தினோம்.
உயர் பாதுகாப்பு வலயங்கள் படிப்படியாக அகற்ற வேண்டும், சிவில் நிர்வாகம் புனரமைப்பு செய்யப்பட வேண்டும் என்பதையும் எமது கோரிக்கைகளாக இருந்தன . அரசாங்கம் அர்த்தமுள்ள அரசியல் தீர்வு பற்றி கவனம் செலுத்தாமல் இருப்பது பற்றிய கவலையையும் நாம் தெரியப்படுத்தினோம்" என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.
5 hours ago
6 hours ago
koneswaransaro Friday, 03 September 2010 02:44 PM
தமிழ் கட்சிகள் அரங்கம் என்பது ஆண்டிகள் சங்கம் போலத்தான்.. அவர்கள் யாருடன் என்ன பேசினாலும் பயன் எதுவும் இல்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago