Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சந்துன் ஏ.ஜெயசேகர)
மாலபேயிலுள்ள மருத்துவக் கல்லூரி, இலங்கை மருத்துவ சங்கத்தாலும், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் விதிக்கப்பட்ட அதிகுறைந்த தராதரத்தை திருப்தி செய்யவில்லை எனவும், இலங்கையில் மருத்துவ பணியில் ஈடுபடும் தகுதியைக் கொண்ட மருத்துவ பட்டத்தை இந்த நிறுவனத்தின் மூலம் பெற முடியாது என்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உப தவிசாளரான டாக்டர் அநுரத்த பாதெனிய தெரிவித்தார்.
அந்நிறுவகம் வழங்கும் பட்டம் இலங்கை மருத்துவக் கவுன்ஸிலினால் அல்லது பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
"எமது சங்கம், தனியார் மருத்துவ கல்லூரி அமைவதற்கு எதிராக செயற்படவில்லை. ஆனால் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கான குறைந்த பட்ச அடிப்படைத் தகுதி இருக்க வேண்டும். இல்லாவிடின் இங்கு பயிற்சி பெற்று வெளியேறும் வைத்தியர்களிடம் சிகிச்சை பெறச் செல்பவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படலாம்" என படுதெனிய கூறினார்.
90 மாணவர்கள் இந்த நிறுவனத்தில் மாணவர்களாக இணைந்துள்ளனர். ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் இரண்டு வருட கட்டணமாக 6.5 பில்லியன் ரூபா அறவிடப்பட்டுள்ளது. இதிலிருந்து ஊழலின் பரிமாணத்தை விளங்கிக் கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.
2 hours ago
5 hours ago
5 hours ago
Mohamed Thursday, 16 September 2010 02:48 PM
அரசாங்கம் உங்களுக்கு எவ்வளவு பணத்தை வாரி இறைக்கிறது என்பதை கருத்தில் கொண்டு உங்கள் பணிகளை செவ்வனே செய்தால் அதுவே போதுமானது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago