Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலிருந்து ஊழியர்களை சேர்த்துக் கொள்வதற்கான வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை என சவூதி அரேபியா கூறியுள்ளதால் வேலை தேடும் இலங்கையர்களில் அதிகமனோர் கட்டாரை நாடலாம் என கட்டார் தலைநகர் டோஹாவிலுள்ள ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக கட்டார் பெனின்சுலா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவிற்கு செல்வதற்கான கதவுகள் மூடப்பட்டால் வேலைவாய்ப்புத் தேடி டோஹாவிற்கு ஊழியர்கள் திரும்பலாம் என நம்புவதாக டோஹாவிலுள்ள இலங்கை ஆட்சேர்ப்பு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், கட்டாரில் பல வேலைவாய்ப்புக்கள் இருப்பதாகவும் அங்கு எந்தவித பிரச்சினையும் இல்லை எனவும் டோஹாவிலுள்ள அந்த முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கைப் பணியாளர்களை சேர்த்துக் கொள்வது தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதை தவிர்க்குமாறு தனது நாட்டின் தனியார் ஆட்சேர்ப்பு அலுவலகங்களிடம், சவூதி அரேபியாவின் தேசிய ஆட்சேர்ப்புக் குழு கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி விடயம் தொடர்பில் எந்தவித தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என டோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஆலோசகர் ஏ.தர்மகுலசிங்கம் கூறினார்.
கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தையடுத்து, அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகள் வெற்றிகரமாக அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். (DM)
46 minute ago
51 minute ago
4 hours ago
FMohamed Thursday, 07 October 2010 12:51 AM
என்ன கொடும சரவணா!!!!! தாங்க முடியல.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago
4 hours ago