2021 மார்ச் 06, சனிக்கிழமை

ஏனைய கைதிகள் போன்றே பொன்சேகாவும் நடத்தப்படுகிறார் : அனோமா

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 08 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகா சிறைச்சாலையில் ஏனைய கைதிகள் போன்றே நடத்தப்படுவதாகவும் அவரின் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையிலேயே உடற்பயிற்சி இயந்திரம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது எனவும் அனோமா பொன்சேகா கூறியுள்ளார்.


பொன்சேகா உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கிய நிலையில் இருப்பதாகவும் சிறைச்சாலை உணவுகளை உட்கொள்வதாகவும் அனோமா பொன்சேகா தெரிவித்தார். 'எனது கணவர் ஒரு வலிமையான மனிதர்' என அவர் கூறினார்.
 

அதேவேளை ஏனைய கைதிகளுக்கு தொலைக்காட்சி பார்க்கும் வசதி இருக்கும் நிலையில் தமக்கும் தொலைக்காட்சிப் பெட்டி வேண்டுமென சரத் பொன்சேகா கோரியுள்ளதாகவும் அனோமா பொன்சேகா தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .