2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

பேராதனை பொறியியல் பீடம் மூடப்பட்டது

Super User   / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காந்த்ய சேனாநாயக்க)

மாணவர்கள் விரிவுரைகளுக்கு சமுகமளிக்காததால், பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

"மாணவர்களுக்கு விரிவுரைகளுக்கு சமுகமளிப்பது குறித்த தேவைப்பாடு உள்ளது. அது நிறைவேற்றப்படவில்லை. பரீட்சை எழுதுவதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத மாணவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது" எனவும் பேராசிரியர் அபயகோன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .