2020 நவம்பர் 28, சனிக்கிழமை

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டம் குறித்து அரச தரப்புடன் மு.கா. நாளை பேச்சு

Super User   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

உத்தேச உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு, நாளை அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இப்பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்த்தன, சுசில் பிரேமஜெயந்த உள்ளிட்ட அரச முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில்  நேற்று அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது  உத்தேச உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தில் காணப்படும் தெளிவின்மைகள் தொடர்பாக எடுத்து கூறியதாக ரவூப் ஹக்கீம், தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு குறிப்பிட்டார்.

அத்துடன், இச்சட்ட மூலத்தில் காணப்படும் சில சாத்தியமற்ற விடயங்கள் தொடர்பாக அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிற்கு எடுத்துக் கூறியதாகவும், இதனாலேயே நாளை அரச தரப்பினர் தமது கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--