2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

ஊக்கமருந்து சோதனை தோல்வி; மஞ்சுவிடம் விளக்கம் கோரி கடிதம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொதுநலவாய விளையாட்டு விழாவில் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற இலங்கை வீரர் மஞ்சு வன்னியாராச்சியின் சிறுநீர் மாதிரியில் ஊக்கமருந்து பாவித்தமைக்கான தடயங்கள் இருப்பதற்கான காரணம் குறித்து 14 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு இலங்கையின் தேசிய ஒலிம்பிக் சங்கம் கடிதம் மூலம் அவருக்கு அறிவித்துள்ளது.

மஞ்சு வன்னியாராச்சி ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றமை குறித்து பொதுநலவாய விளையாட்டு அதிகாரிகள் தேசிய ஒலிம்பிக் சங்கத்திற்கு அண்மையில் அறிவித்திருந்தனர்.

ஆஸ்துமா நோய்காக பாவித்த மருந்துகளின் காரணமாகவே ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றதாக வன்னியாரச்சி முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • xlntgson Sunday, 24 October 2010 08:38 PM

  எதிர்பார்த்தேன்!
  பொதுவாகவே நான் விளையாட்டில் செலுத்திவந்த ஆர்வத்தை இல்லாமற்செய்தது இது போன்ற செய்திகளே.
  இவர் அமெரிக்காவுக்கு தங்கபதக்கம் வாங்கி கொடுப்பவராக இருந்தால் இதெல்லாம் வெளியில் வராது!
  கிரிக்கெட்டிலும் எனக்கு ஆர்வம் இல்லாமல் போனது மேட்ச் பிக்சிங் (match fixing) என்னும் பேசிவைத்துக்கொண்டு தோற்று விடுவதாகும் விளையாட்டு முடிவுகளை வைத்து ரசிகர்கள் அடித்துக்கொண்டும் விளையாட்டு வீரர்களையும் வீரர்களின் வீட்டை தாக்கியும் பல வருடங்களின் பின் அவர்கள் மடையர்கள் என்று விளங்க உண்மை வெளிவரும், இளமைபோய்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--