Super User / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
யுத்ததினால் விதவைகளான பெண்களுக்கு சுய தொழில் முயற்சி வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் பெண்கள் அபிவிருத்தி நிதியத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
அத்துடன் விதவைகளுக்கான சுயதொழில் வாய்ப்புகளுக்காக இந்திய அரசுடன் இலங்கை அரசு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த விதவைகளுக்கு சுயதொழில் வாய்ப்புக்கான பயிற்சி வழங்கவுள்ளதாகவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா கூறினார்.
ஐக்கிய நாடுகள் பெண்கள் அபிவிருத்தி நிதியத்துடன் மேற்கொள்ளவுள்ள ஒப்பந்ததின் மூலம் வட மாகாண விதவைகளின் சுயதொழில் விருத்தியை அபிவிருத்தி செய்ய முடியும் என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தால் எந்த உதவிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனும் குற்றச்சாட்டை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நிராகரித்தார்.
6 minute ago
10 minute ago
17 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
17 minute ago
43 minute ago