2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

போரினால் துன்பத்திற்குள்ளான தமிழ் மக்களிடம் சொல்ஹெய்ம் மன்னிப்பு கோரவேண்டும் : கோமின் தயாசிறி

Super User   / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சமாதான முயற்சிகளுக்கான அனுசரணையாளராக நோர்வேயை இலங்கை தெரிவு செய்தமை பாரிய தவறாகும் எனவும் நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹேய்ம்  போரினால் துன்பத்திற்குள்ளான அப்பாவி தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் பிரபல சட்டத்தரணி கோமின் தயாசிறி இன்று கூறியுள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

போர் நிறுத்த உடன்படிக்கை குறித்து அவர் கூறுகையில், ஆசிய கலாசாரம் மற்றும் நாகரிகம் நோர்வே நாட்டினர் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு சிங்கள மற்றும் தமிழர்களின் மனப்பாங்கும் புரியவில்லை என்றார்.

போர்நிறுத்த உடன்படிக்கையுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் குறிப்பாக, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹேய்ம்  போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் கோமின் தயாசிறி கூறினார்.

அவர்தான் பிரதான குற்றவாளி. அவரை இலங்கை அரசாங்கம் வரவேற்கப்படாத ஒருவராக நோக்க வேண்டும் எனக் கூறிய கோமின் தயாசிறி, சொல்ஹெய்ம் புலிகளின் நண்பராக இருப்பதாக குற்றம் சுமத்தியதுடன் அவரது அரசாங்கத்திலுள்ள ஏனையோர் புலிகளுக்குச் சார்பானவர்களாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .