2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

அதிகாரிகளின் கவனயீனமே கைதிகளிடையே கைகலப்பிற்கு காரணம்: அரியநேத்திரன் எம்.பி.

A.P.Mathan   / 2010 நவம்பர் 03 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் 40 பேர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டு அங்குள்ள சிறிய சிறைக்கூடத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்தபோது, ஏனைய சிங்கள கைதிகளினால் தாக்கப்பட்ட சம்பத்தினை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்.

இச்சம்பம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்...

சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அப்பாவி தமிழ் கைதிகளை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். விசாரணைகள் நடைபெறும்வரை அக்கைதிகள் ஏனைய பாரிய குற்றங்களை மேற்கொண்ட சிங்கள கைதிகளுடன் சிறியதொரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் சிங்கள கைதிகளுக்கும் தமிழ் கைதிகளுக்குமிடையில் வாய்த்தர்க்கம் முற்றி, கைகலப்பில் முடிந்திருக்கிறது. உடனே காவலிலிருந்த அதிகாரிகள் அப்பாவி தமிழ் கைதிகளை கடுமையாக தாக்கியதாக எனக்கு அறியக்கிடைத்திருக்கிறது.

அதிகாரிகளின் கவனயீனத்தினால் ஏற்பட்ட இந்த தகராறில் அப்பாவி தமிழ் கைதிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவத்தினை நான் எனது கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். அத்தோடு இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .