2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

சர்.தொழில் நிறுவனத்தில்முறைப்பாடு செய்ய தாதியர் சங்கம் தீர்மானம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 10 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுசைன்)

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதான உரிமையை நசுக்கும் முயற்சிகள் தொடர்பில் சர்வதேச தொழில் நிறுவனத்திடம் முறையிடப்படும் என அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கம்  இன்று கூறியுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை சுகயீன லீவு அறிவித்துவிட்டு வேலைக்கு செல்லாத தாதியர்கள் அனைவரையும் வேலையைவிட்டு நீங்கிவிட்டவர்களாக கருதும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடரும் பட்சத்தில் தாம் தொழிற்சங்க நடவடிக்கையை தொடரப் போவதாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் கூறியது.

பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று அதில் நல்ல முடிவுகள் கிடைத்ததால் தமது தீர்மானத்தை மீளாய்வு செய்ய தயாராக இருப்பதாகவும் மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியது.

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்படும் தாதியர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை சட்டத்துக்கு புறம்பானது. அடுத்த வாரம் நாம் இது பற்றி முறைமையான முறைப்பாட்டை செய்வோம் என தாதியர் சங்க தலைவர் சமன் ரத்னபிரிய கூறினார்.

கடந்த 3 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டவர்களின் பெயர் பட்டியலை கோருவதும் தாதியர்களில் லீவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சுற்றரிக்கை அனுப்புவதும் தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளை நசுக்கும் முயற்சியாகும் என ரத்ரனபிரிய கூறினார்.

நேற்று இடம்பெற்ற அடையாள வேலைநிறுத்தம் வெற்றிகரமானது எனவும் இதன்போது அவசர சேவைக்காக தாம் நோயாளர் விடுதியில் ஒன்று அல்லது இரண்டு தாதியரை நியமித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தமது கோரிக்கைகளை பூர்த்தி செய்ய இப்போதைய அமைச்சராலோ முன்னைய அமைச்சராலோ முடியவில்லை. எனவே  இதுவே எமக்கு வழியாக இருந்தது. இது தொடர்பில் அதிகாரிகளை எம்மோடு பேசும்படி கோருகின்றோம். நியாயமில்லாத கோரிக்கைகள் ஏதும் இருப்பின் நாம் அவற்றை வாபஸ் பெறுவோம் என்றார்.

பொதுமக்களுக்கு இதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக தாம் மனம் வருந்துவதாகவும் இதைவிட்டால் தமக்கு வேறுவழியிருக்கவில்லை எனவும் ரத்னபிரியா விளக்கப்படுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .