2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

உதுல் பிரேமரட்ரனவுக்கு பிணைகோரி மனு

Super User   / 2010 நவம்பர் 18 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாருக் தாஜுதின் , லக்மல் சூரியகொட)


அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரத்னவுக்காக ஆஜரான அறிவுறுத்தும் சட்டத்தரணி, உதுல் பிரேமரத்னவை பிணையில் விடுமாறு கோரும் பிணை விண்ணப்பத்தை இன்று மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அக்டோபர் 14 இல், பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழு வளாகத்தில்  இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது 152,834 ரூபாய் பெறுமதியான பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த பிணை விண்ணப்பம் நாளை மேல் நீதிமன்ற நீதிபதி தீபலி விஜயசுந்தர, முன்னிலையில் விசாரணைக்கு வரும்.

உதுல் பிரேமரத்ன, இரண்டு வாரங்களுக்கு மேலாக பிணை வழங்கப்படாமல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு பிணை வழங்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த நிலையில்தான் புதிய பிணைகோரும் விண்ணப்பம் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--