Super User / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூளைசாலிகளின் வெளியேற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படும் நாடாக இலங்கை உள்ளதென ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற உயர் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உயர்கல்வி கற்றோரில் வருடாந்தம் 27.5 சதவீதமானோர் நாட்டைவிட்டுச் செல்வதாக அகில விராஜ் காரியவசம் எம்.பி. கூறினார்.
இச்சதவீதம் இந்தியாவில் 4.2 சதவீதமாகவும் பாகிஸ்தானில் 9.2. சதவீதமாகவும் பங்களாதேஷில் 4.7 சதவீதமாகவும் நேபாளத்தில் 2.7 சதவீதமாகவும் மாலைதீவில் 2.2 சதவீதமாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மருத்துவர்களில் 17.4 சதவீதமான மருத்துவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாட்டைவிட்டுச் செல்கின்றனர். இதுவும் தெற்காசியாவில் அதிக சதவீதமாகும். இச்சதவீதம் இந்தியாவில் 3.33 ஆகவும் பாகிஸ்தானில் 5.0 ஆகவும் உள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
28 Oct 2025
28 Oct 2025
மூ.சஷ்டி வரதன் Friday, 10 December 2010 03:34 PM
புத்திசாலிகள் என்று சொல்கிறீங்க . அப்போ அவங்க நாட்டைவிட்டு ஓடுவாங்க தானே . அதைவிடுத்து அநியாயமாக சித்திரவதைப்பட்டு சாகச் சொல்கிறீங்களா ?
Reply : 0 0
xlntgson Sunday, 12 December 2010 10:23 PM
இது தமிழரைக்குறித்த செய்தி மட்டுமல்ல, சிங்களவர் ஒருவர் படிப்பாளி, நாட்டுக்கு தேவையான ஒரு மருத்துவர் வெளியேறினாலும்-brain drain-என்று அழைக்கப்படும்.
இலவசக்கல்வியில் படித்து அங்கே குறைந்த ஊதியத்தில் பணிபுரிய சம்மதிக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சரியே, ஆனால் மிகுந்த பொருட்செலவில் படித்தோம் என்று பெரும் தொகைகளை எதிர்பார்த்தால் அவர்கள் விரும்புவதில்லை. இதுதான் நிதர்சனம். எவ்வளவும் பட்டுக்கொண்டு நீங்கள் படிக்கவேண்டும் அங்கே போய் அல்லல்பட, எல்லாம் ஒன்றுதான் மனதுக்குப்பிடித்திருக்கிறது என்பதைத்தவிர!
Reply : 0 0
xlntgson Monday, 13 December 2010 09:23 PM
தன் சொந்தநாட்டில் வேலை கிடைத்தாலும் சம்பளம் போதாதென்றோ அல்லது மதிப்பில்லை என்றோ வெளிநாடு போனவர்களை நாம் குறை கூறவியலாது. ஆனால் அங்குபோய் அரசியல் புரிகின்றவர்கள் தகுதிவாய்ந்தவர்கள் தானா என்ற ஐமிசமும் உருவாகிறது.
இதற்காகவே இவர்களுக்கு ஊதியமும் ஓய்வும் கொடுக்கப்படுகிறதா? அநேகர் தங்களை சிறுபான்மையாக நடத்தியமையினால் சென்றோம் என்பர். ஆனால் அங்கேயும் அவர்கள் இனத்துவேசத்துக்கு ஆளாகாமல் இல்லை?
அப்போதுதான் அவர்கள் தன் சொந்த நாட்டை நேசிக்கின்றனர் அதை அவர்கள் விரும்புவதில்லை திருப்பி அனுப்பிவிடுவர்.
திரிசங்கு?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Oct 2025
28 Oct 2025