2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

சிங்கள, தமிழ் பிரச்சினையை தூண்டி விட்டவர்கள் தமிழ் அரசியல்வாதிகளே: எல்லாவல மேதானந்த தேரர்

Super User   / 2010 டிசெம்பர் 16 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)


சிங்கள, தமிழ் மக்களிடையே பிரச்சினையை தூண்டிவிட்டவர்கள் தமிழ் அரசியல்வாதிகளே என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் தலைவருமான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இன்றைய கொழும்பு அமர்வில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த எல்லாவள மேதானந்த தேரர்

'தற்போது சிங்கள அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு எதிராக நாடாளுமன்ற்தில் கூட பேசுவதில்லை. ஆனால் தமிழ் அரசியல்வாதிகளே சிங்களவர்களுக்கு எதிராக பேசுகின்றனர்.

முல்லைத்தீவு மன்னார் மாங்குளம் திருகோணமலை மட்டக்களப்பு உட்பட வடக்கு கிழக்கு பகுதியில் வாழ்ந்த சிங்களவர்கள் பயங்கரவாதத்தின் காரணமாக விரட்டியடிக்கப்பட்டனர்.   

இவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் யாரும் பேசுவதில்லை.  எல்லோரும் தமிழ், முஸ்லிம்களிள் மீள்குடியேற்றம் தொடர்பிலேயே பேசுகின்றனர். இதனால் சிங்கள மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

கல்வியை எடுத்துக்கொண்டால் 17 இலட்சம் சனத்தொகையை கொண்ட கொழும்பு மாவட்டத்தில் க.பொ.த. உயர்தரம்  கற்பதற்கு 32 பாடசாலைகள் உள்ளன.

இதேவேளை 492,000 சனத்தொகையை கொண்ட யாழ். மாவட்டத்தில் க.பொ.த. உயர்தரம் கற்பதற்கு 33 பாடசாலைகள் காணப்படுகின்றன.

நாட்டில் இடம்பெற்ற அனைத்து அநீதிகளுக்கும் பிரபாகரனின் பயங்கரவாதமே காரணமாகும்.

ஏதாவது யுத்த குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அது பிரபாகரனாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கும்.

சிங்கள பௌத்த கலாசாரம் மற்றும் சிங்கள மொழிக்கு 2500 வருடங்கால வரலாறு உண்டு. இதை நிரூபிப்பதற்கு எழுத்து மூல ஆவணங்கள் உண்டு.

நான் இங்கு வரலாறுகளையே பேசுகின்றேனே தவிர தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக பேசவில்லை.

இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் கலாசார செயற்பாடுகளை சிங்கள மன்னாகளே மேற்கொண்டார்கள். குளங்கள் கட்டியது கூட சிங்கள மன்னர்களே.

யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கோயிலை கட்டியது சப்புமல் குமார எனும் சிங்களவரே ஆகும்.

இங்கையை ஆண்ட ஆரிய சக்கரவர்த்தி தமிழர் என பிரபாகரன் தெரிவித்திருந்;தார். அது முற்றிலும் பொய்யாகும்.

பொலன்னறுவ இராச்சியத்தின் பின்னரே வட பகுதிக்கு தமிழர்கள் சென்றனர். எனினும் அங்கு சுயாதீன அரசு இருக்கவில்லை.

வன்னி என்பது ஒரு சிங்கள சொல்லாகும். முன்னொரு காலத்தில் இது காடாக இருந்தது. இப்பகுதியை சிங்கள மன்னர்கள புனர்நிர்மாணம் செய்தனர்.

பிரபாகரனால் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதனாலேயே 1983ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது.

இக்கலவரத்தை உண்டுபன்னியவர்கள் அரசியல்வாதிகளே. சிங்கள மக்களிற்கும் இதற்கும் தொடர்பில்லை. இதற்கு முழு பொறுப்பும் பிரபாகரனேயாகும்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள பௌத்த மத வழிபாட்டு தலங்களை மீண்டும் செயற்படுத்தவும் விடுதலை புலிகளால் உடைக்கப்பட்ட பௌத்த மத வழிபாட்டு தலங்களை புனர்நிர்மானம் செய்து மீண்டும் இயங்க செய்ய ஆவணம் செய்யுமாறு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இங்கு பேசிய விடயங்கள் அனைத்தும் எனது ஆராய்ச்சி மூலம் பெற்ற விடயங்களே தவிர பிழையான எண்ணக்கருக்கள் அல்ல. இங்கு எந்தவொரு சமூகத்திற்கு எதிராகவும் பேசவுமில்லை' என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவள மேதானந்த தேரர் தனது ஆராய்ச்சியின் போது பிடிக்கப்பட்ட சில புகைப்படங்களையும் தான் எழுதிய புத்தகங்களையும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--