Menaka Mookandi / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் அவரது தலைமையிலான அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தை விட விரைந்து செயற்படும் என்று அமெரிக்கா எதிர்ப்பார்க்கலாம் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பட்ரீசியா புடெனிஸினால் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக விக்கிலீஸ் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் பிரதான பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கம் பற்றிய பொது கண்காணிப்பக்களில் முக்கிய மாற்றங்கள் எற்படலாம் என்றும் பற்றிசியாவினால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா, பிரதான பிரச்சினைகளில் முக்கியமான வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். இவரது அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் அது ராஜபக்ஷ அரசாங்கத்தை விட துரிதமாக இயங்கும்.
இருப்பினும், தேர்தலுக்கு அப்பால் பிரச்சினைக்குரிய விடயங்கள் இரு பகுதியினரையும் பொறுத்தளவில் ஒன்றாகத்தான் உள்ளது.
எந்த அரசாங்கமாக இருப்பினும் முன்னேற்றம் தொடருமென எதிர்ப்பார்க்கிறோம் என்றும் அவர் தனது கேபிளினூடாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார் என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025