2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு 'முஸ்லிம் எயிட்' உதவி

Super User   / 2011 ஜனவரி 10 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெள்ளத்தினால் நாடு முழுவதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க அவசர நடவடிக்கைகளை 'முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா' அமைப்பு மேற்கொண்டுள்ளது.

நீர் சுத்திரிக்கும் இயந்திரங்கள் இரண்டு ஆடைகள் மற்றும் 100000 ரூபா பெறுமதியான அத்தியவசிய உணவு மற்றும் மருந்து வகைகளை அவ்வமைப்பு அனுப்பியுள்ளது.

ஏறாவூப் பற்று ஏறாவூர் நகர் கோரளைப்பற்று மத்தி மற்றும் கோரளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேசங்களில் 'முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா நிறுவனம்' உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்க விரும்புவோர் "முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா" நிறுவனத்தோடு தொடர்பு கொள்ளும் படி கோரப்பட்டுள்ளனர். (தொலைபேசி:011285024).


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--